புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா : துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேச்சு

ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றது வரலாற்று சாதனை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதிய மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மும்மதங்களை உள்ளடக்கிய ஆன்மிக தளங்களை ராமநாதபுரம் கொண்டுள்ளதாக புகழாரம் சூட்டினார்.

ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றது வரலாற்று சாதனை என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

விழாவுக்கு தலைமையேற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், தமிழில் வணக்கம் என கூறி பேச்சைத் தொடங்கினார்.

தென் இந்தியாவின் மிகச்சிறந்த தலைவராக ஜெயலலிதா விளங்கினார் என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் 75 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என கூறிய ஹர்ஷ் வர்தன், இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகும் என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே