விவேக் மறைவு – அரசியல் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல்..!!

சென்னையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமான நடிகர் விவேக்கின் உடலுக்கு திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விவேக்கின் மறைவு குறித்து அவருடன் பணியாற்றிய திரைப்பட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருடைய மறைவு குறித்து அவர்கள் தங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் பழனிசாமி இரங்கல்

முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: மறைந்த விவேக் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் சமூக பாதுகாப்பில் அக்கறை கொண்டவராக இருந்தார். இவர் பழக மிக இனிமையானவர். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். கலாமின் கனவை நிறைவேற்ற நல்ல பணிகள் செய்தவர். கலை மற்றும் சமூக சேவையால் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்

திரைப்படங்கள் மூலம் சமூக சீர்திருத்த கருத்துக்களை பரப்பியவர். இவரது மறைவு மீளா துயரத்தை தருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்; பல்கலை வித்தகராக திகழ்ந்தவர் விவேக். தனித்துவமான நடிப்பாற்றலால் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டியவரை இவ்வளவு விரைவாக இயற்கை பறித்து கொண்டது. சின்னகலைவாணர் என பெயர் பெற்ற நகைச்சுவை நடிகர் மறைவு பேரதிர்ச்சியை தருகிறது. இவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

நடிகர் செந்தில்

திரைத்துறையில் திறமையான நடிகர் விவேக். சுற்றுச் சூழலுக்காக போராடியவர் என்று தனது இரங்கல் செய்தியில் நடிகர் செந்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மயில்சாமி

நல்ல தர்ம சிந்தனை உள்ளவர். அவருடைய இழப்பு எனக்கு மிகுந்த வேதனையாக உள்ளது.

நடிகர் சூரி

அவர் மறைந்தாலும் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் மறைவை நினைத்து மரங்கள் கூட கண்ணீர் சிந்தும்.டி.டி.வி.தினகரன்நல்ல சமூக சிந்தனை உடையவர், செயற்பாட்டாளர் நடிகர் விவேக்.

நடிகை ராதிகா

நடிகர் விவேக் மரண செய்தி எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே