சேலத்தில் அனுமதி இன்றி செயல்பட்டு வரும், குடிநீர் கேன் உற்பத்தி நிலையங்களுக்கு சீல்!

சேலத்தில் உரிய அனுமதியின்றி முறைகேடாக செயல்பட்ட 30 கேன் குடிநீர் உற்பத்தி நிலையங்களுக்கு வருவாய்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தமிழகத்தில் சட்ட விரோதமாக தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சியதால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான அளவில் உள்ளதால் நிலத்தடி நீர் எடுக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. 

அதே நேரத்தில் குடிநீர் பயன்பாட்டுக்கு நிலத்தடி நீர் பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் பெற்று நீர் எடுத்து கொள்ளலாம் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.

சேலத்தில் முறைகேடாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவது குறித்து வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் நிலவியல் அதிகாரிகள், இரு குழுக்களாக பிரிந்து குரங்குச்சாவடி,  எருமாபாளையம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது பல்வேறு நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்காமல் குறிப்பிட்ட அளவை மீறி முறைகேடாக செயல்பட்டு வந்ததை கண்டறிந்தனர்.

அவ்வாறு செயல்பட்ட 30 குடிநீர் உற்பத்தி நிலையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே