இளைஞர்கள்தாம் வைரஸ் பரவலை அதிகரிக்கின்றனர்! – WHO

உலகம் முழுவதும் இருக்கும் இளைஞர்கள் மூலம்தான் கொரோனா பரவல் அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 உலகளாவிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்ட அறிவிப்பில், இளைஞர்கள் தொற்றுநோய்க்கு ஆளாகக்கூடும் என்று கூறியதுடன், மற்றவர்களைப் போலவே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்களை வலியுறுத்தியது.

கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் சுமார் 1.7 கோடி பேரை பாதித்துள்ளது.

அமெரிக்கா, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் குறிப்பிட்ட சில நாடுகளில் இளைஞர்கள் கொரோனாவால் அதிக அளவு பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுபற்றி கூறுகையில், தொற்று சில நாடுகளில் இளைஞர்களிடையே அதிகமாக பரவி வருகிறது.

இளைஞர்களும் தொற்று நோய்க்கு ஆளாகக்கூடும்.

அவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது. மற்றவர்களைப் போலவே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இளைஞர்கள் எடுக்க வேண்டும் என்றார்.

தடுப்பூசி விவகாரம் குறித்து பேசிய அவர். மக்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரே நேரத்தில் கோவிட் -19 தடுப்பூசி பெறும் சூழ்நிலை இருக்க வேண்டும் என்றும் இதற்காக கடந்த காலத்தில் செயல்பட்ட முறையை நாங்கள் மாற்றியமைக்க வேண்டும் என்றும் டெட்ரோஸ் கூறினார்.

மேலும் இதை விட மோசமாக இளைஞர்கள்தாம் வைரஸ் பரவலை அதிகரிக்கவைக்கின்றனர். எனவே, இளைஞர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மற்றவர்களைப் போல முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தலைவர்களாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை அவசியம்.

அவர்கள்தான் மாற்றத்தின் இயக்கமாக இருக்க வேண்டும். கோவிட்-19 வெளிப்படுத்தும் அபாயத்தைக் குறைப்பதில் நம் அனைவருக்கும் ஒரு பங்கு உள்ளது என்பதை ஒவ்வொரு தனி மனிதரும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று பேசியுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே