இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது.
சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பெயர் கடந்த ஆண்டு சூட்டப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் ” அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் “புரட்சி தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம்” என மாறியுள்ளது.
மேலும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ, புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா CMBT மெட்ரோ நிலையம் என மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.