டெல்லியில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் இலவசமாக பயணச்சீட்டு பெற வித்தியாசமான அணுகுமுறையை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் டிக்கெட் இயந்திரம் முன்பு தோப்புகரணம் போல உட்காந்து எழுகிறார்.
அந்த வீடியோ வை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வரவேற்று பதிவிட்டிருந்தார்.
டெல்லியில் உள்ள ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில், நடைமேடை சீட்டுகளை இலவசமாக பெற வீடியோவில் உள்ளது போல பயிற்சி செய்ய வேண்டும்.
டிக்கெட் வழங்கும் இயந்திரம் முன்பு, 3 நிமிடங்களில் 30 முறை உட்காந்து எழ வேண்டும்.
அவ்வாறு செய்தால் இலவச பயணச்சீட்டு வழங்கப்படும்.
இது போன்ற செயல்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க துணை புரியும் என்று ரயில்வே அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த ஏற்பாடு அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.