வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதிய தனியுரிமை கொள்கைகளை அறிவித்திருந்தது. அதன்படி தனிநபரின் தகவல்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட புதிய கொள்கைக்கு எதிராக டெல்லியைச் சேர்ந்த கர்மான்யா சிங் ஷரீன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது புதிய கொள்கை கொள்கை தொடர்பாக நீதிபதிகள் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

அதில், தனிப்பட்ட தகவல்களை மக்கள் பெரிதாக கருதுகின்றனர், அவர்களின் நலன்களை காப்பது நமது கடமை என்று நீதிபதிகள் கூறினர். 

4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ளதாக வாட்ஸ்அப் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது, ஐரோப்பிய நாடுகளைப் போன்று இந்தியாவும் பிரைவசிக்கென சிறப்பு சட்டம் கொண்டு வந்தால் பின்பற்றத் தயார் என்று வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து புதிய கொள்கை தொடர்பாக வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே