கடும் நிதி நெருக்கடியில் உள்ளது தமிழக அரசு : அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில்கூட கல்விக்கான நிதியை குறைக்கப்படவில்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியின் 98ம் ஆண்டு  விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும்; கடன் சுமை ரூ.4,00,000 கோடி அளவுக்கு உள்ள நிலையில் கூட, ரூ.65,000 கோடி ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஊதியமாக வழங்கப்பட்டு  வருவதாகவும் தெரிவித்தார். 

ரூ.30,000 கோடி அளவுக்கு கடன் செலுத்தி வரக் கூடிய நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்விக்காக மட்டும் ரூ.42,000 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறிறள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே