ஆறு பவுலர்களுடன் களமிறங்க திட்டம்.. இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்?

இஷான் கிஷான் ஒப்பனிங் நன்றாக இருந்தாலும் மிடில் ஆர்டர் வரிசையை பலப்படுத்த இன்றையப் போட்டியில் சூர்யகுமார் யாதவ்க்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி 6 பவுலர்களுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தால் தொடரை இழக்கும் என்பதால் இன்றையப் போட்டி வாழ்வா? சாவா? என்று உள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது. முதல் 3 போட்டியிலும் டாஸ் வென்ற அணியே போட்டியை வென்றது என்பதால் இன்றைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. 3-வது போட்டியில் இந்திய பந்துவீச்சு தொதப்பலாக இருந்தது என்று கேப்டன் விராட் கோலி கவலை தெரிவித்திருந்தார். அதனால் இன்றையப் போட்டியில் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை களமிறக்க வாய்ப்புள்ளது.

கே.எல்.ராகுல் 3 போட்டிகள் முறையே 1,0,0 என்று அவுட்டாகி ஓபனிங்கை சொதப்பி வருகிறார். அணிக்கு திரும்பிய ஹிட்மேன் ஃபார்முக்கு திரும்பால் இருப்பது அணிக்கு சற்று பலவீனமாகவே உள்ளது. ஒபனிங் சொதப்பி வருவதால் கேப்டன் விராட் கோலிக்கு பேட்டிங்கில் கூடுதல் சுமை உள்ளது. நடுவரிசை வீரர்களான பந்த், ஷ்ரேயாஸ் ஐயரும் ஜொலிக்காமல் உள்ளனர். இஷான் கிஷான் ஒப்பனிங் நன்றாக இருந்தாலும் மிடில் ஆர்டர் வரிசையை பலப்படுத்த இன்றையப் போட்டியில் சூர்யகுமார் யாதவ்க்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சை பொறுத்தவரை சஹால் ரன்களை அள்ளிக் கொடுக்கிறார். ரன்களை கொடுக்கும் அளவிற்கு விக்கெட் வீழ்த்ததால் இன்றையப் போட்டியில் அவருக்கு பதில் அக்ஷர் படேல் களமிறங்கினால் பேட்டிங், பந்துவீச்சு இரண்டும் வலுவடையும். அதேப்போன்று 6-வது பந்துவீச்சாளர் தேவைப்படுவதால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஒய்வு கொடுத்து தீபக் சஹார் அணியில் இணைய வாய்ப்புள்ளது.

உத்தேச இந்திய அணி : கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், சர்துல் தாகூர், தீபக் சாஹர், புவனேஸ்வர் குமார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே