தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,023 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35லட்சத்தை கடந்துள்ளது.

இரண்டு லட்சத்து 40 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

தமிழகத்தில் நேற்று வரை 2,757பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மேலும் 266பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 3023ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை இதுவரை 1,40,716 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 38பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தம் 1,379 பேர் குணமடைந்துள்ளனர் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே