சென்னை- சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்ட வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சேலத்தை சேர்ந்த யுவராஜ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை- சேலம் 8வழி சாலை திட்டத்துக்கு எதிராக 50க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2019-ம் ஆண்டு ஏப்ரல் 8-ல் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு சார்பில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் நில உரிமையாளர்கள் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி அளித்தது. 

இதனிடையே இத்தீர்ர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சேலம் அயோத்தியாபட்டினத்தை சேர்ந்த யுவராஜ் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை- சேலம் இடையே ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலைகளில் ஒன்றை விரிவாக்கம் செய்யலாம் எனவும் புதிதாக நிலம் கையகப்படுத்த தேவையில்லை என்றும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே