ஜனவரி 11ஆம் தேதி வரை திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தமிழகத்தில் ஜனவரி 11-ஆம் தேதி வரை 50% இருக்கைகளுடன் தான் திரையரங்குகள் இயங்க அனுமதி என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா காலத்தில் பொருளாதார சிக்கலுகளுக்கு அதி முக்கியத்துவம் அளிக்க இயலாது.

50% இருக்கைகளுடன் காட்சிகளை அதிகப்படுத்துவது தொடர்பாக ஜனவரி 11க்குள் பதில் தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

திரையரங்குகளில் 100% இருக்ககைகளை அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

100% இருக்கை விவகாரத்தை தமிழக அரசு சரியான முறையில் பரிசீலித்து முடுவெடுக்கும் என நம்புகிறோம் என்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே