ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது.
இதை எதிர்த்து தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் மாநாட்டுக் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகமது யூசுப் தரிகாமி என பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
கடந்த நவம்பர் 14-ம் தேதி இந்த மனுக்கள் மீது இடைக்கால உத்தரவை பிறப்பிக்க மறுத்த உச்சநீதிமன்றம், அனைத்து மனுதாரர்களின் வாதங்களைக் கேட்ட பிறகே உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு மனுக்கள் விசாரணைக்கு வருகிறது.