அய்யனார் கோவிலில் முஸ்லிம் ஜமாத் அன்னதானம்.!

இந்த செய்தியின் தலைப்பு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.. ஆனால் அதுதான் உண்மை.

இராமநாதபுரம் மாவட்டம், பெருங்குளம் கிராமத்தில் நடக்கும் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவில், அதே ஊரை சேர்ந்த முஸ்லிம் ஜமாத் மூலமாக அன்னதானம் வழங்கப்படும் என்று விழா அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதுமாக ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் பலருக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திருக்கிறது. மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த கிராமம் இருந்து வருவதாக சுற்று வட்டார மக்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவின் மிக முக்கிய அடையாளம் வேற்றுமையில் ஒற்றுமை. இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதர சகோதரிகளாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பது தான் பலரின் எண்ணம். ஆனால் மத அரசியலுக்காக பல நேரங்களில் பல இடங்களில் அது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. அப்பேற்பட்ட சூழ்நிலையில் பெருங்குளம் கிராம மக்கள் அதை நடைமுறையில் சாத்தியமாக்கி இருப்பது அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே