சென்னை பூந்தமல்லி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் உயிரிழந்தார்.
காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த லாவண்யா தனியார் மருத்துவமனையில் தொழில்நுட்ப வல்லுனராக இருந்தார்.
இவர் கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
பின்னர் கடந்த 30ஆம் தேதி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு நடத்திய பரிசோதனையில் லாவண்யாவிற்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.