புருஷோத்தமனின் மறைவு அதிமுகவிற்கு பேரிழப்பு – எடப்பாடி பழனிசாமி

விஷவண்டு கடித்ததால் உயிரிழந்த புதுவை அதிமுக செயலாளர் உடலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் அஞ்சலி செலுத்தினார்.

புதுவை அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான புருஷோத்தமன், நேற்று விழுப்புரம் மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள தனது விவசாய நிலத்தை பார்வையிட சென்றுபோது விஷ வண்டு கடித்து மயக்கமடைந்தார்.

பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புருஷோத்தமனின் மறைவு புதுச்சேரிக்கு மட்டுமின்றி அதிமுகவிற்கும் பேரிழப்பு என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே