தர்பார் பட சிறப்புக் காட்சிக்கு முறைப்படி அணுகினால் அனுமதி வழங்கப்படும் : கடம்பூர் ராஜூ

தர்பார் படத்திற்கு இதுவரை சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்கவில்லை என்றும் முறைப்படி யார் அணுகினாலும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தர்பார் படத்திற்கு சிறப்பு காட்சி மறுக்கப் படவில்லை என்றும் அரசுக்கு நடிகர்களில் எந்த பாகுபாடும் இல்லை என்றும் தெரிவித்தார்.

நடிகர் விஜய் அஜித் படங்களுக்கும் ரஜினியின் காலா போன்ற படங்களுக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்து இருக்கிறோம் என்றும் கடம்பூர் ராஜூ குறிப்பிட்டு உள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டிருந்தால் அதிக இடங்களில் வென்றிருக்கும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது பற்றிய கேள்விக்கு கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றி அவர் கூறி இருக்கலாம் என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே