கிருஷ்ணகிரி மாவட்டம், கத்தாழை மேடு பகுதியில் இருந்த ஈ வெ ராமசாமி சிலைக்கு அதிகாலை மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குப்பம் சாலை அருகே உள்ள சமத்துவபுரத்தில் மார்பளவு உள்ள ஈ வெ ராமசாமியின் சிலை ஒன்று உள்ளது.

இந்த சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

குப்பம் சாலை அருகே அமைந்துள்ள, கத்தாழ மேடு கிராமத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் சமத்துவபுரம் அமைக்கப்பட்டது.

இதன் நுழைவாயிலில் ஈ வெ ராமசாமியின் மார்பளவு கூடிய வெங்கல சிலை ஒன்று உள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் டயரை கொளுத்தி அந்த சிலையின் மீது போட்டு கொளுத்தி உள்ளனர்

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அந்த மர்ம நபர்களை விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே