100 நாள் வேலை திட்டத்தின் ஒருநாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தி மத்திய அரசின் உத்தரவின்படி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் பொருளாதாரா நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். 

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தொடர்ச்சியாக பல பல திட்டங்களை அறிவித்தனர்.

அதில், முக்கியமாக 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

​​இந்தியா முழுக்க மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் மூலமாகப் பணிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ளன.

இந்த திட்டம் மூலம் இந்தியாவில் 50 முதல் 60 மில்லியன் ஊரகப் பணியாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.

ஆண்டுக்கு 100 நாட்கள் என்று திட்டமிடப்பட்டு இந்தப் பணிகள் நடைபெறும்.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் ஏறக்குறைய அனைத்துப் பணிகளும் முடக்கபட்டன.

இன்றுமுதல் 100 நாள் திட்டத்தின்கீழ் பணிபுரியலாம் என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே