தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அபூர்வா ஐஏஎஸ், உயர்க்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர் கல்வித்துறைச் செயலாளராக இருந்த மங்கத்ராம் சர்மா, ஆவணக் காப்பகங்கள் ஆணையர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இணைச்செயலாளராக டி.மணிகண்டனும், அருங்காட்சியகங்கள் துறை ஆணையராக எம்.எஸ்.சண்முகமும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக கே.பி.கார்த்திகேயனும், தொழில் வழிகாட்டி அமைப்பின் நிர்வாக இயக்குநராக அனீஷ் சேகரும் மாற்றப்பட்டுள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் சந்தோஷ்பாபு, தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு ஃபைர்நெட் கழகத்தின் துணை செயலாளராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே