தாயார் அற்புதம்மாள் உடன் பறை இசைத்து மகிழ்ந்த பேரறிவாளன்!

ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து வெளிவந்த பேரறிவாளன் தனது தாயார் அற்புதம்மாளுடன் இணைந்து பறை அடித்து மகிழ்ந்தார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் தனது தந்தையை கவனித்து கொள்ள பரோல் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை நீதிமன்றம் ஏற்றதையடுத்து ஒரு மாதம் பரோலில் அவர் கடந்த 12ம் தேதி வெளியே வந்தார்.

சிறையில் இருந்து வெளிவந்த அவர் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தாருடன் தங்கியுள்ளார். 

இந்நிலையில் பேரறிவாளனின் சகோதரி அன்புமணியின் மகள் திருமணம் கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்றது.

நேற்று காலை திருமண விழாவில் பங்கேற்க, 20 மேற்பட்ட போலீஸாரின் பாதுகாப்புடன் பேரறிவாளன் கிருஷ்ணகிரிக்கு வந்தார்.

பின்னர் திருமண நிகழ்ச்சியின் போது அவர் தனது தாயார் அற்புதம்மாளுடன் இணைந்து பறை இசைத்து மகிழ்ந்தார்.

பின்னர் மீண்டும் போலீசார் காவலுடன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு பேரறிவாளன் திரும்பினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே