கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா தேவியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலா தேவி, கடந்த 18ம் தேதி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதையடுத்து ஜாமீனை ரத்து செய்து நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்நிலையில் நீதிமன்றத்துக்கு வந்த நிர்மலா தேவியை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், நிர்மலா தேவியை அமைச்சர் ஒருவர் மிரட்டுவதாக குற்றம்சாட்டினார்.
ஒரு கடத்தல்காரரை ஆஜர்படுத்துவது போல் நிர்மலா தேவியை ஆஜர்படுத்துவதாகவும் பசும்பொன் பாண்டியன் புகார் தெரிவித்தார்.