சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு குறித்து மக்கள் மவுனமாக இருக்க கூடாது – சூர்யா

கடந்த சில நாட்களாக மத்திய அரசின் EIA2020 என்னும் புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் குறித்த செய்திகள் பரபரப்பாக சமூகவலைத்தளத்தில் தீயாக பரவிவருகிறது.

இந்த விதிகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது என்பதும் இந்த விதிகளில் உள்ள சில சரத்துக்களை அரசியல் தலைவர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

EIA2020 குறித்து நேற்று உழவன் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கையை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

நடிகர் கார்த்திக் பதிவை அவரது சகோதரரும் நடிகருமான சூர்யா ட்விட்டரில் குறிப்பிட்டு பேசியுள்ளார். 

அதில் ‘பேசிய வார்த்தைகளை விட பேசாத மௌனம் மிக ஆபத்தானது’ என்றும் ‘காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க, நம் மௌனம் கலைப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்காக குரல் கொடுக்கும் தம்பிக்கு சூர்யா கொடுத்த ஆதரவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே