பிப்ரவரி மாதம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். அன்றைய தினத்தில் காதலர்கள் தங்களது காதலை பரிசு பொருட்கள் கொடுப்பது, சினிமா, பார்க், பீச், இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

காதலர் தினம் பெயர் தோன்றிய வரலாறு

3 ஆம் நூற்றாண்டின் ரோமில் வாழ்ந்த கத்தோலிக்க மதகுருவான செயிண்ட் வாலண்டைனின் பெயரால் காதலர் தினம் அழைக்கப்படுகிறது.

பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரை ரோமானியர்கள் லுபர்காலியாவின் எனும் பண்டிகையை கொண்டாடினர்.

அதில், ஆண்கள் ஒரு நாயையும் ஆட்டையும் பலியிட்டு அதன் ரோமத்தால் திருமணமாக பெண்ணை அடிப்பார்கள். இது கருவுருதலை வலுப்படுத்தும் என்பதால் பெண்களும் அதை விருப்பப்பட்டு ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் ஒரு குவளையில் இருக்கும் பெண் பெயரை தேர்ந்தெடுத்து தங்களது காதலை வெளிப்படுத்துவர். சில சமயங்களில் இது திருமணமாக மாறும்.

ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணமாக இருந்தது.

அந்த சமயத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என ஆசைப்பட்ட ஆண்களுக்கு அந்நாட்டு பாதிரியார் வேலண்டைன் உதவினார்.

அரச கட்டளையை மீறி அவர் திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார்.

அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. இந்த நாள் வாலண்டைன் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போதைய நாளில் காதலர் தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

பெரும்பாலான நாடுகளில் காதலர் தினம் கொண்டாடப்பட்டாலும், இந்த நாளை தங்களது, கலாச்சாரங்களுக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்து கொண்டாடி வருகின்றனர்.

உலகின் சில பகுதிகளில், காதலர்கள், தம்பதியினரைக் காட்டிலும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடையே அன்பை வெளிப்படுத்தும் ஒரு நாளாக காதலர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே