ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனா – தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் ஆளுநர்

உதவியாளர் தாமஸ் மற்றும் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து டாக்டர்களின் அறிவுரைப்படி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், 7 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழக கவர்னர் மாளிகையில் பணியாற்றிய 147 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 84 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதனையடுத்து, அங்கு கிருமி நாசினி தெளித்து தூய்மைபடுத்தப்பட்டது.

இந்நிலையில், கவர்னர் உதவியாளர் தாமஸ் உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இருப்பினும், கவர்னர் பன்வாரிலால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கவர்னர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா உறுதியானதால், பன்வாரிலாலை 7 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுரை வழங்கினர். 

இதனையடுத்து அவர் தனிமைபடுத்தி கொண்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே