துணை முதல்வர் பேசுவதை கேட்காமல் கலைந்து சென்ற மக்கள்..!!

மின்மிகை மாநிலமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஓபிஎஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைளருமான ஓபிஎஸ் நேற்று திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் அதிமுக வேட்பாளர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் , உடுமலை ராதாகிருஷ்ணன் , பல்லடம் தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மடத்துக்குளம் சி.மகேந்திரன், வால்பாறை வேட்பாளர் அமுல் கந்தசாமி ஆகியோரை ஆதரித்து பேசினார்.

பின்னர் திருப்பூர் யூனியன் மில் சாலையில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து துணை முதல்வர் ஓபிஎஸ் பரப்புரை மேற்கொண்டார் .

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் வீடில்லா ஏழைகளுக்கு 6 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது .

அதே போல் நெல் உற்பத்தியில் கடந்த 6 ஆண்டுகளாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது .

திமுக ஆட்சியில் இருந்ததை விட 30 மடங்கு பணிகளை அதிமுக செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எதுவும் இல்லாமல் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது.

மின்பற்றாக்குறையை போக்க தற்போது மின் மிகை மாநிலமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.

அப்போது அதிமுகவின் சாதனைகளை கூறி ஓபிஎஸ் தீவிரமாக பேசி கொண்டிருக்கும் நிலையில் நாற்காலிகளில் அமர்ந்திருந்த மக்கள் அங்கிருந்து கிளம்ப தொடங்கினர்.

இதனால் மேடையில் இருந்த அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இருப்பினும் ஓபிஎஸ் விடாமல் பேசி கொண்டிருக்க, அவர் பேச்சை முடிப்பதற்குள் கூட்டம் கலைந்து விட்டது. இதனால் அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே