ரூ.6,000 கொடுப்பாங்க வாங்கிட்டு கதையை முடிச்சுடுங்க – டிடிவி தினகரன்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அனைத்து கட்சியினரும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், விழுப்புரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், பழனிசாமி சொல்கிறார் நான் ஊர்ந்து போகிறதற்கு பல்லியா? என்று, அனால் அவர் பச்சோந்தி.

அதிமுக, திமுக இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்கின்றானார். ஆனால், இருவரையும் தாக்கி பேசும் தகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மட்டுமே உள்ளது.

நாட்கள் கடந்து போவதால், பயம் வந்து ஆர்.கே.நகரில் கொடுத்த மாதிரி ரூ.6,000 கூட கொடுப்பாங்க. அது உங்கள் பணம். ஆர்.கே.நகர் மக்கள் மாதிரி வாங்கிட்டு கதையை முடிச்சிருங்க என விமர்சித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே