பொதுஇடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிந்து வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுதும் குறைந்து வந்த கொரோனா வைரஸ் பரவலானது தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த மாதம் வரை 500, 600 என குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் 800 என அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால் பல கட்டுப்பாடுகள் அரசால் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுஇடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிந்து வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மாஸ்க் அணிய வேண்டும் என்ற உத்தரவை மீறுபவர்கள் மீது பொதுசுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து அதிகரித்து, நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருபவர்களை கடந்த வருடத்தை போல கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட தலைமை செயலர், இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பல மாநிலங்களில் கொரோனா பரவலை பொறுத்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே