பெரம்பலூரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், சிறுகன்பூரை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் திருமணமாகி அவரது மனைவி 6 மாத கர்ப்பமாக உள்ளார்.
சென்னையில் வேலைப்பார்த்து வந்த அவர் தற்போது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரது மனைவியை பெற்றோர் பிரித்து வைத்திருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், தன்னிடம் இருந்து மனைவியை அவரின் பெற்றோர் பிரித்து வைத்துள்ளதாக புகார் தெரிவித்த அவர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.
இதைப்பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். தன் மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.