பாஜகவில் எஸ்.ஏ.சந்திரசேகர் சேர போவதாக சமூகவலைதளங்களில் தகவல்..!!

பாஜகவில் சேர போவதாக வெளியானது வதந்தி என இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு பிரபலங்கள் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள்.

சில பிரபலங்கள் கட்சி மாறி வருகிறார்கள்.

அந்த வகையில் ராதாரவி, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம், கங்கை அமரன், கஸ்தூரி ராஜா, குட்டி பத்மினி, மதுவந்தினி உள்பட பல பிரபலங்கள் பாஜகவில் இணைந்தனர்.

இதேபோல் திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்து விபி துரைசாமி பாஜகவில் இணைந்தார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையும் பாஜகவில் இணைந்தார்.

கடைசியாக தற்போது குஷ்பு காங்கிரஸில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் பாஜகவில் சேரப்போவதாக தகவல் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில் பாஜகவில் சேரப்போவதாக வெளியான தகவலை விஜய்யின் தந்தை எஸ்எ சந்திரசேகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். முற்றிலும் வதந்தி.

இப்படிப்பட்ட வதந்தி ஏன் பரபப்பப்படுகிறது என்று தெரியவில்லை என்று வேதனை தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே