குஜராத்தில் அதிகரிக்கும் கரோனா; 4 நகரங்களில் இரவு நேர லாக் டவுன் அமல்

குஜராத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.

இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

குஜராத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது எச்சரிக்கையை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 800 என்ற எண்ணிக்கையை கடந்து வருகிறது.

இதனையடுத்து 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கை அமல்படுத்த குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட் ஆகிய 4 முக்கிய நகரங்களில் நாளை முதல் மார்ச் 31ந்தேதி வரை இரவு நேர லாக் டவுன் அமல்படுத்தப்படுகிறது. இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே