பாரசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வழங்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கவில்லை – உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாரசிட்டமால் மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வழங்கக் கூடாது என எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என தமிழக அரசு பதிலளித்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்புக்கு காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்றவை தான் அறிகுறிகளாக உள்ளன.

அதேசமயம் சாதாரண காய்ச்சல் என்றாலும் கரோனா அச்சம் நிலவுவதால் தமிழகத்தில் உள்ள பல மருந்தகங்களில் பாரசிட்டமால் மாத்திரைகள் மக்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனையடுத்து மருந்து சீட்டு இல்லாமல் பாரசிட்டமால் மாத்திரைகள் மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க கோரப்பட்ட நிலையில், தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், பாரசிட்டமால் மாத்திரைகளை மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் வழங்கக் கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசின் விளக்கத்தை ஏற்றதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே