ஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த பாண்டியா – கரண் சகோதரர்கள்!

இந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான 2வது ஒரு நாள் போட்டியில் பாண்டியா சகோதரர்களான குருணால் பாண்டியா மற்றும் ஹர்திக் பாண்டியாவும், கரண் சகோதரர்களான டாம் கரண் மற்றும் சாம் கரணும் தங்களின் பெயரை வரலாற்றில் இடம்பெறச்செய்தனர். இது மிக மிக அரிய நிகழ்வாக வர்ணிக்கப்படுகிறது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் புனேவில் இன்று( வெள்ளிக்கிழமை) நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் முதல் இன்னிங்சின் போது கிரிக்கெட்டில் ஒரு தனித்துவமான மற்றும் அரிய நிகழ்வு அரங்கேறியது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரே போட்டியில் எதிர் எதிர் அணிகளில் உள்ள ஜோடி சகோதரர்கள் பேட் செய்து ஒன்றாக பந்து வீசினர்.

பாண்டியா சகோதரர்களான குருணால் பாண்டியா மற்றும் ஹர்திக் பாண்டியாவும், கரண் சகோதரர்களான டாம் கரண் மற்றும் சாம் கரணும் தங்களின் பெயரை வரலாற்றில் இடம்பெறச்செய்தனர். இது மிக மிக அரிய நிகழ்வாக வர்ணிக்கப்படுகிறது.

இந்தியா முதல் பேட்டிங் செய்த போது சாம் கரண் ஆட்டத்தின் 9வது ஓவரை வீசினார், அவருடைய சகோதரரான டாம் கரண் ஆட்டத்தின் 10வது ஓவரை வீசினார். இந்திய தரப்பில் ஹர்திக் பாண்டியாவும், ரிஷப் பந்தும் ஆடிக்கொண்டிருந்த போது கரண் சகோதரர்களில் மூத்தவரான டாம் ஆட்டத்தின் 47வது ஓவரில் பந்து வீசி ரிஷப் பந்தை ஆட்டமிழக்கச் செய்தார். இதன் காரணமாக ரிஷப் பந்துக்கு பதிலாக குருணால் பாண்டியா களத்துக்கு வந்து அவருடைய சகோதரர் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஆடினார்.

இதன் மூலம் ஒரு நாள் போட்டி வரலாற்றில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஒரு ஜோடி சகோதரர்கள் பந்து வீசிய போது, எதிரணியில் ஒரு ஜோடி சகோதரர்கள் ஒன்றாக பேட்டிங் செய்தனர்.

இந்தப் போட்டியில் 16 பந்துகளில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக 35 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 300 ரன்களை கடக்க அவர் உதவினார். குருணால் பாண்டியா 9 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார்.

டாம் கரண் 10 ஓவர்களில் 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். சாம் கரன் 7 ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே