கிரிக்கெட் போட்டிக்கு முன் இங்கிலாந்து வீரர்கள் பெண்கள் டியோடரண்டை பயன்படுத்துவோம் – பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து வீரர்கள் போட்டிகளுக்கு களத்தில் இறங்குவதற்கு பெண்கள் டியோடரண்ட் பயன்படுத்துவோம் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடரை வெல்ல போராடி வருகிறது. இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து மீதமுள்ள 2 ஒரு நாள் போட்டிகளிலும் வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்.

இதனிடையே இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார். அப்போது இங்கிலாந்து அணி குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது இங்கிலாந்து வீரர்கள் போட்டிக்கு முன் பெண்கள் டியோடரண்ட் பயன்படுத்துவோம். ஆண்கள் டியோடரண்டை விட பெண்களின் டியோடரண்ட் மிகவும் வாசனையாக இருக்கும். நான் டவ் பிராண்டை தான் பயன்படுத்துகிறேன். அதில் மாதுளை ஃபளேவர் மிகவும் எனக்கு பிடிக்கும் என்றுள்ளார்.

மார்ச் 23-ம் தேதி நடைபெற்ற போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினர். நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு திரும்பிய பென் ஸ்டோக்ஸ் இந்திய அணிக்கு எதிராக இமலாய இலக்குடன் களமிறங்கி வெறும் ஒரு ரன்னில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே