தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 19ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.
வரும் வியாழனன்று சென்னையிலிருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார்.
அப்போது தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கும் படி முதலமைச்சர் கோரிக்கை விடுப்பார் எனத் தெரிகிறது.
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள், மத்திய நீர்வளத்துறை செயலாளரை சந்திக்கவுள்ளனர்.
அப்போது காவிரி விவகாரம், மேகதாது விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.