2021 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அறிவித்துள்ளது திமுக.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.

இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, குழு அமைத்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தேர்தல் அறிக்கை குழுவில் டி. ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ,கனிமொழி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் டி.கே.எஸ் இளங்கோவன், பேராசிரியர் அ. ராமசாமி ஆகியோரும் தேர்தல் அறிக்கைக் தயாரிப்புக் குழுவில் உள்ளனர்.

2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. 

அதிமுகவுக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அக்கட்சியினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

தற்போது திமுக தேர்தல் பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது பெரும் அரசியல் களத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே