குடிநீர் வரியை செப். மாதம் 30ஆம் தேதிக்குள் செலுத்த சென்னைக் குடிநீர் வாரியம் வேண்டுகோள்..!!

சென்னையில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி குடிநீர் கட்டணத்தை செப்டம்பர் 30-க்குள் செலுத்த வேண்டும் என சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் தனது ட்விட்டரில் ,நுகர்வோருக்கான நீர் வரி செலுத்தும் விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்துகொண்டு வருகின்ற 30-09-2021 ஆம் தேதிக்குள் பணம் செலுத்துமாறு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நுகர்வோர்கள் தங்களின் வரியையும், கட்டணங்களையும் சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகம், பகுதி அலுவலகம், பணிமனை வசூல் மையம், அரசு இ-சேவை மையம் மூலம் பணத்தை செலுத்தலாம். மேலும், இணையம்வழி வாயிலாக வாரியத்தின் வலைதள முகவரி https://chennaimetrowater.tn.gov.in பயன்படுத்தி பணத்தை செலுத்தலாம் என தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே