மாஸ்டர் படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் நெய்வேலியில் படமாக்கப்பட்டு வருகிறது.
இதில் நடிகர் விஜய் சேதுபதியும், விஜயும் மோதிக் கொள்ளும் சண்டைக் காட்சிகள் எடுக்கப்படுவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தினந்தோறும் நடிகர் விஜயை காண்பதற்கு ரசிகர்கள் கூட்டம் படப்பிடிப்பு தளத்திற்கு படையெடுத்தனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று படப்பிடிப்பு முடிந்த பிறகு வேனில் மீது ஏறிய விஜய், ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
மேலும், நேற்று பேருந்தின் மீது ஏறி நின்றும் ரசிகர்களிடம் தலை குணிந்து வணக்கம் தெரிவித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் பெரும் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் ‘மாஸ்டர்’ படத்தின் அடுத்தகட்ட அறிவிப்புக்கு காத்திருந்தனர்.
தற்போது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பொருட்டு ‘மாஸ்டர்’ படத்தின் ஒரு பாடல் காதலர் தினத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஒரு குட்டிக் கதை’ என்ற அனிருத் இசையில் உருவான பாடல், பிப்ரவரி 14ம் தேதி மாலை வெளிவரவுள்ளது.
நடிகர் விஜயிடம் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையால், அவரது ரசிகர்களிடைய வரவிருக்கும் படமான ‘மாஸ்டர்’ படம் குறித்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
சோதனைக்கு பிறகான நடிகர் விஜயின் நடவடிக்கை ரசிகர்களை கவரும் வகையில் இருந்து வருகிறது.