தாடி என்றால் கே.ஜி.எப் என்று சொன்னவர்கள் இனி இப்படத்தைப் பார்த்த பின் தாடி என்றால் சிம்புவிற்கு தான் நல்லாருக்கும் என்று சொல்வார்கள் என்றனர் ரசிகர்கள்.
கடந்த 2016ம் ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்குப் பிறகு சிம்பு, கவுதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ எப்போது இணையும் என பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி, வெந்து தணிந்தது காடு படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படம் எப்போது வெளியாகும் என மிகுந்த ஆர்வத்தில் அனைவரும் இருந்தனர்.
இந்நிலையில், இன்று வெளியானது வெந்து தணிந்தது காடு திரைப்படம். இப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார் தெலுங்கு நடிகையான சித்தி இட்னானி. பெரும்பான்மையான படங்களில் காதல் கதையையே மையமாகக் கொண்டு இயக்கிவந்த கவுதம் முதன்முறையாக கேங்ஸ்டர் கதையை மையப்படுத்தி எடுத்துள்ளார்.
செப்டம்பர் 2ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சிக்கு நடிகர் சிம்பு என்ட்ரி கொடுத்தார். பின்னர், எல்லாருடைய வாழ்க்கையிலும் பெண்கள் இல்லாத பகுதி இருக்காது. அது போல இந்த படத்திலும் லவ் உள்ளது என்றார் இயக்குநர் கவுதம்.
அதன்படி இப்படம் கேங்ஸ்டர், காதல் கதை நிறைந்ததாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படம் மாஸ், கிளாஸ் என்று சொல்லமாட்டேன். இப்படத்தில் மாஸ் உள்ளது. ஆனால் இது ஒரு எக்ஸ்பீரியன்ஸ் தான். நீங்கள் தான் படத்தைப் பார்த்துச் சொல்ல வேண்டும் என்று இந்நிகழ்ச்சியில் சிம்பு உரையாற்றியிருந்தார். இப்படியாக ரசிகர்களுக்கு இப்படம் மீது அதிகப்படியான ஈர்ப்பு இருந்தது.
இந்நிலையில், இன்று வெளியானது வெந்து தணிந்தது காடு திரைப்படம். சென்னை ரோஹினி திரையரங்கில் ரசிகர்களிடம் விமர்சனம் கேட்டபோது, ஒரு சில மக்கள் படம் நன்றாக இருந்தது என்று கூறினர். இன்னும் சில படம் ரொம்ப மெதுவாக போகுது என்று கூறினார்கள். நடிகை சித்திக்கு இப்படத்தில் மிகக் குறைவான சீன் தான் இருந்தது என்றும் இன்னும் அதிகமான சீன் வைத்திருக்கலாம் அவர்களது நடிப்பு நன்றாக இருந்தது என்றும் தெரிவித்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை பட்டைய திரையரங்கைப் பட்டைய கிளப்பிடிச்சு என்று கூறினர்.
ஒரு சில இளைஞர்கள் படம் 10 நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை தூக்கம் வருகிறது என்றனர். புதுப்பேட்டை, நாயகன், விக்ரம் எனப் பல படங்களின் கலவையாக இருந்துள்ளது என்றனர். இப்படத்தில் தாடியுடன் புது கெட்பில் சிம்பு நடித்திருப்பது அற்புதமாக இருந்தது என்றனர். தாடி என்றால் கே.ஜி.எப் என்று சொன்னவர்கள் இனி இப்படத்தைப் பார்த்த பின் தாடி என்றால் சிம்புவிற்கு தான் நல்லாருக்கும் என்று சொல்வார்கள் என்றனர் ரசிகர்கள்.
இது போன்று, நடுநிலையில் ரசிகர்களிடமிருந்து விமர்சனங்கள் கிடைத்துள்ளது. மொத்தத்தில் படம் நல்லாயிருக்கா, இல்லையா என்றால் ஒரு முறை பார்க்கலாம் எனக் கூறியவர்கள் தான் அதிகம்.