பெண்கள் மூலமே நான் வளர்ச்சி அடைந்தேன் : பாக்யராஜ்

பெண்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானதை, ஒரு பெரிய விஷயமாகவே கருதவில்லை என இயக்குநர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்ற பட விழா ஒன்றில் பேசிய பாக்கியராஜ், திரைப்படத் துறையில் பெண்கள் மூலமே தான் வளர்ச்சி மற்றும் வெற்றியை அடைந்ததாகக் கூறினார்.

இந்த விஷயத்தில் தமக்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக் கொண்ட அவர், ஏதோ காரணத்தால் அந்தக் கருத்து தவறாக திரிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு சம்மன் அனுப்பியவர்களே அதுபற்றி யோசித்திருப்பார்கள் எனவும் கூறினார். 

இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், பாக்கியராஜ் அளவிற்கு பெண்களை மதிக்கக் கூடியவர்கள் இந்த உலகில் யாரும் கிடையாது என கூறினார்.

பெண்கள் விழிப்புடன் இருந்தால் யாராலும் அவர்களை ஏதும்  செய்ய முடியாது என்றும், பாக்யராஜ் கூறிய கருத்து உண்மையான அக்கறை கொண்டது எனவும் தெரிவித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே