பிப்ரவரி 16-ம் தேதி பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி முதலமைச்சராக அர்விந்த் கெஜ்ரிவால் வரும் 16ம் தேதி பதவி ஏற்க உள்ளார். 

டெல்லியில் புதிதாக தேர்வாகியுள்ள ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ-க்களின்  கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

இதற்காக, சட்டமன்றக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் இன்று நடைபெற்று.

இதில், கட்சியின் சட்டமன்றத் தலைவராக அர்விந்த் கெஜ்ரிவால் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். 

இதை அடுத்து, ஆளுநர் அணில் பைஜாலை நேரில் சந்தித்து அர்விந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். மேலும் வரும் 16ம் தேதி அர்விந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.

விழாவில் பங்கேற்க மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா முழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்கள் அழைக்க அர்விந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே