கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை, தியேட்டர்கள், மால் மூடல், எல்லைகளுக்கு சீல் வைப்பு என்று பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே மத்திய அரசு தமிழகத்தில் ஈரோடு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்கி தனிப்படுத்த உத்தரவிட்டது.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதில் 3 மாவட்டத்தை தனிமைப்படுத்துதல், மேலும் சில மாவட்டங்களில் இதை நீட்டிக்கலாமா என்பது பற்றி ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் மூட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
பால் நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகளை தவிர அனைத்து கடைகளையும் மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.