இந்தியாவில் ஒரே நாளில் 1,684 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,684 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது :

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,684 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 23,077 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 718 ஆக உள்ளது.

கடந்த 28 நாள்களில் 15 மாவட்டங்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

அதேபோன்று கடந்த 14 நாள்களில் பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 80 மாவட்டங்களில் ஒருவர் கூட கரோனா பாதிப்புக்கு ஆளாக்கவில்லை. 

கரோனா பரவும் இரட்டிப்பு விகித கால அளவு 7.5 நாள்களில் இருந்து 10.1 நாள்களாக அதிகரித்துள்ளது.

கரோனா மீட்பு விகிதம் 20.57% ஆக அதிகரித்துள்ளது. மொத்தம், 4,749 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே