CAA- குறித்த எதிர்க்கட்சிகள் போராட்டம் தேவையற்றது – ஹெச்.ராஜா

கேரள மாநில சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம், ஒரு வெற்று கடிதம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக குலசேகரத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, இந்த போராட்டங்கள் என்பது பொய்யை பரப்பி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற எதிர் கட்சிகளின் சதி திட்டதின் ஒரு பகுதி தான் என்று கூறினார்.

மேலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட சபைகளில் போடப்பட்ட தீர்மானம் என்பது ஒரு வெற்று கடிதம் தான் என்று குறிப்பிட்டார்.

இதுமட்டுமல்லாமல், ஊரில் இருக்கும் சில அரசு க்ளப்களில் போடும் தீர்மானத்திற்கு சட்ட ரீதியாக என்ன வலிமை உள்ளதோ, அதே தான் கேரளா சட்ட மன்றத்தில் போட்ட தீர்மானத்திற்கும் உள்ளது என்றும் விமர்சித்தார்.

உதயநிதி ஸ்டாலின் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அரசியலே தெரியாத வாரிசு என்கிற காரணத்திற்காக ஒரு பதவிக்கு வந்து பேசுவதை எல்லாம் கேட்காதீர்கள் என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே