கொடியேற்றத்துடன் தொடங்கிய 463வது ஆண்டு கந்தூரி பெருவிழா!

புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 463வது ஆண்டு கந்தூரி பெருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகை மாவட்டம் நாகூரில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 463-ம் ஆண்டு கந்தூரிப் பெருவிழாவையொட்டி, மீராப் பள்ளிவாசல் மின்னொளியில் ஜொலித்தது.

கந்தூரி விழா கொடியேற்றத்திற்கான சிறப்புக்கொடி சிங்கப்பூரிலிருந்து நாகைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அதற்கு தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளிவாசலில் இருந்து தொடங்கிய கொடி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு தொழுகைக்கு பின்பு, தர்காவின் 5 மனோராக்களில் ஒரே நேரத்தில் கொடியேற்றப்பட்டது.

இதனையொட்டி நடத்தப்பட்ட வண்ணமிகு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

கந்தூரி விழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சியை காண துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் தர்காவில் குவிந்தனர்.

கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே