ஆட்சியைக் கலைப்பதை, கருக்கலைப்பு போன்று எதிர்க்கட்சியினர் நினைத்துவிட்டனர் : செல்லூர் ராஜூ

தமிழக அரசை யாராலும் கலைக்க முடியாது என்று கூறியுள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆட்சி கலைப்பு என்ன கரு கலைப்பா என கேள்வியெழுப்பியுள்ளார்.

மதுரை பெத்தானியாபுரம் பல்லவன் நகரில் நடைபெற்ற கழிவு நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சரிடம், தமிழக அரசை கலைக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்தவர், யார் நினைத்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது என்றும் ஆட்சியைக் கலைப்பது என்பது கருக்கலைப்பு போன்று நினைத்து விட்டார்களா எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

ரஜினி, கமல்ஹாசன் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, அதனால் அதிமுகவுக்கு கவலையில்லை என்று அமைச்சர் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, துறை ரீதியிலான சந்திப்பு என அமைச்சர் பதிலளித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே