பட்டாசு தயாரிப்பு – சிபிஐ விசாரிக்க உத்தரவு

தமிழகத்தில் பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது தொடர்பாக சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும்; தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பட்டாசு ஆலைகள் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் இயங்கும் 6 பட்டாசு கம்பெனிகள் விதிகளை மீறுகின்றனவா?

பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவா? என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்குப் பிறகு அறிக்கை தாக்கல் செய்யவும் சிபிஐ இணை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே