பெண்களுக்கு பிரதமர் கொடுத்த சர்ப்ரைஸ்..!

வருகிற 8ஆம் தேதியன்று, உலக மகளிர் தினத்தையொட்டி, தனது அனைத்து சமூக வலைதள கணக்குகளையும், சாதனை பெண்கள் குறித்த பதிவுகளுக்காக, விட்டுக்கொடுப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

சமூக வலைதள கணக்குகளை கைவிடலாமா என யோசித்துக் கொண்டிருந்ததாக பிரதமர் வெளியிட்ட நேற்றைய பதிவில், நீங்களும் உங்கள் பதிவுகளை இடலாம் என கடைசி வரியில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கான அர்த்தம், இன்றைய டுவிட், மூலம் தெரியவந்திருக்கிறது.

இன்றைய பதிவில், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், மற்றும் முகநூல் பக்கங்களில் #SheInspiresUs என்ற ஹேஷ்டேக்கில் சாதனை பெண்கள், சாதித்த பெண்கள், சாதனைகள் புரிந்தும் வெளி உலகுக்கு தெரியாத பெண்கள் குறித்த தகவல்களை, குறிப்பிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே ஹேஷ்டேக்கில், சாதனை பெண்கள் குறித்த வீடியோவை, யூ-டியூப்பில் பதிவிடலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே