உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம் அனைத்துத்துறை செயலர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் பஞ்சாயத்து சட்டப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
விடுமுறை காலத்தில் பணிக்கு வராத ஊழியர்களின் ஊதியத்தை பிடிக்கக் கூடாது என்றும் சண்முகம் கூறியுள்ளார்.
இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.