சென்னையில் அத்தியாவசியம், அவசர பணிகளுக்காக 200 பேருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்று (24/03/2020) இரவு 12.00 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இதனால் பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை.
இந்த நிலையில் சென்னையில் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள தலைமை செயலக அலுவலர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர், செவிலியர், தூய்மை பணியாளர்களுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சிங்கப்பெருமாள் கோயில், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பூந்தமல்லி, மணலி, எண்ணூர், நெற்குன்றம், தேனாம்பேட்டை, துரைப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.